Posts

Showing posts from September, 2017

நாக தோஷத்திற்கு போகர் கூறிய எளிய பரிகாரம்

Image
நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார். நாக தோஷம் உள்ளவர்கள், தங்களையும், தங்களின் சந்ததிகளையும் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ள பரிகாரம் ஒன்றினை போகர் சித்தர் தனது ”போகர் 12000” நூலில் கூறியிருக்கிறார். இந்த பரிகாரத்தை வருடத்தின் குறிப்பிட்ட ஒரு நாளில் மட்டுமே செய்திட வேண்டும் என கூறுகிறார். அவர் குறிப்பிடும் அந்த தினம் ”நாக சதுர்த்தி திதி” நாக சதுர்த்தி திதி அன்று, அரச மரம் ஒன்றின் அடியில் நாக எந்திரம் ஒன்றினை பீடத்தில் அமைத்து அதன் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருக்கும் நாகத்தின் கருங்கல் சிலையினை பிரதிஷ்டை செய்து வணங்கி வருவதன் மூலம் நாக தோஷத்தில் இருந்து நிரந்தரமாக விடுபட்டு நலமுடன் வாழலாம் என்கிறார் போகர். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நாக விக்கிரகத்தின் உருவ அமைப்பையும், நாக யந்திரம் தயாரிக்கும் முறையையும் தனது நூலில் தெளிவாகவும் விளக்கமாகவும் போகர் குறிப்பிட்டுள்ளார். நாகத்தின் சிலையானது இரண்டரை அடி (பீடத்துடன் சேர்த்து) உயரத...

திருமண பாக்கியம் தரும் திருத்தலங்கள்

Image
திருமண தடை உள்ளவர்கள் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன. வாழ்க்கைத் துணை அமையவில்லையே, வயதாகிக் கொண்டே போகின்றதே.. வரன் ஏதும் பொருத்தமானதாக வரவில்லையே என்ற கவலை இன்றைய காலகட்டத்தில் பலரின் பிரச்சினையாக இருக்கிறது. எப்படிப்பட்ட கவலையாக இருந்தாலும் பலன்தரும் பரிகாரங்களை மேற்கொண்டால், இனிய வாழ்க்கைத் துணை அமையும் என்பதில் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட வழிபாட்டு தலங்கள் பல நம் நாட்டில் உள்ளன. திருமணஞ்சேரி வழிபாடு தித்திக்கும் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். சுக்ர ஷேத்திரமான ஸ்ரீரங்கம் வழிபாடும், அக்னீஸ்வரர் வீற்றிருந்து அருள்வழங்கும் கஞ்சனூர், கல்யாண ஜகன்நாதர் அருள்வழங்கும் திருப்புல்லாணி, சிறுவாபுரியில் உள்ள வள்ளிமணவாளப் பெருமான், தெய்வானையை முருகப்பெருமான் மணந்த இடமான திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டாலும் இல்லறம் நல்லறமாக முடியும். குருபலம் கூடி வந்தால் தான் திருமணம் முடியும். எனவே குருவிற்குரிய சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்றும்...

காளசர்ப்ப தோஷம் போக்கும் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில்

Image
சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும். சர்ப்ப தோஷம், நாகதோஷம் என ஜோதிடக்கலை குறிப்பிடுவதெல்லாம், ராகு அல்லது கேது ஆகிய இரு கிரகங்களில் ஒன்றினால் மட்டுமே ஏற்படுவதாகும்.  ஆனால் காள-சர்ப்ப தோஷம் என்பது ராகு, கேது ஆகிய இரு கிரகங்களினாலுமே ஏற்படும். இதற்கு மிகவும் நல்ல பலனும், பரிகாரமும் அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்த திருத்தலங்களில், சென்னையை அடுத்துள்ளதும் வைணவத்தின் அவதார மகாபுருஷரான ஸ்ரீராமானுஜர் அவதரித்த புண்ணிய பூமியுமான ஸ்ரீபெரும்புதூர் பரிகார தலங்களில் ஒன்றாகும். சர்ப்பங்களில் முதன்மை ஆனவரும் ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆசனமானவரும், ஐந்து தலைகளினால் பிரகாசிப்பவருமான ஆதிசேஷனே, திரேதா யுகத்தில் லட்சுமணனாகவும், துபாவர யுகத்தில் பலராமராகவும் கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராகவும் அவதரித்ததாக விஷ்ணுபுராணம் கூறுகிறது. கோவிலுக்குப் பின்புறம் உள்ள குளம், ஸ்ரீமந் நாராயணனின் ஆக்ஞையினால், ஆதிசேஷன் உருவாக்கியதால் அனந்தசரஸ் எனப் பெயரும் புகழும் பெற்றதாகும்.  இந்தத் திருக்குளத்தில் நீராடி,...

ராகு - கேதுக்கு தீபம் ஏற்றினால் ஜோடி சேரலாம்

Image
ராகு - கேது தோஷத்தால் திருமணம் தடை படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள உரிய பரிகாரத்தை செய்து வந்தால் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். ராகு-கேதுக்களுக்கு நடுவில் கிரகங்கள் சிக்கியிருந்தால் கால சர்ப்ப தோஷமாகும். சர்ப்ப தோஷத்தின் பிடியில் சிக்கியிருந்தால் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி திருமணத் தடைகள் அதிகம் ஏற்படும்.  அவர்கள் ராகு காலத்தில் துர்க்கை வழிபாட்டையும், அதோடு இணைந்து கேதுவிற்கு விநாயகர் வழிபாட்டையும் முறைப்படி மேற்கொண்டு வரவேண்டும். ஜோடி தீபம் ஏற்றினால் ஜோடி சேரும் வாய்ப்பு கண்டிப்பாக உருவாகும்.  சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலங்களுக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்தால் தடைகள் விலகும்.

செவ்வாய் தோஷம் நீங்க உதவும் ஆலயங்கள்

Image
செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம். செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கீழ்க்கண்ட ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்துக்கு சென்று வழிபட்டு பரிகாரம் செய்யலாம். 1. கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர், திருநெல்வேலி. 2. வைத்த மாநிதி பெருமாள் (நவதிருப்பதி-3), திருக்கோவில், திருக்கோளூர், தூத்துக்குடி.  3. தண்டாயுதபாணி திருக்கோவில், திண்டுக்கல். 4. சதுர்முக முருகன் திருக்கோவில், சின்னாளப்பட்டி, திண்டுக்கல். 5. நரசிங்கப்பெருமாள் திருக்கோவில், மன்னாடி மங்கலம், மதுரை.  6. பிரளயநாதர் திருக்கோவில், சோழவந்தான், மதுரை.  7. ஆறுமுக நயினார் திருக்கோவில், கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி, தேனி. 8. நாகம்மாள் திருக்கோவில், பாலமேடு, கெங்கமுத்தூர், மதுரை. 9. திருவாப்புடையார் திருக்கோவில், செல்லூர், மதுரை. 10. விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருப்புனவாசல், புதுக்கோட்டை. 11. வீரபத்திரர் திருக...

பில்லி, சூனியம் தோஷம் நீக்கும் அங்காளபரமேஸ்வரி

Image
விழுப்புரத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள். சிவபெருமானை பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை போக்கியவர் அங்காளபரமேஸ்வரி அம்மன். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூரில் உள்ளது. பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக தோஷங்களை போக்கும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை விளங்குகிறாள்.  ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் கோவிலில் திருவிழா நாட்கள் ஆகும். இங்கு மாதந்தோறும் அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.

ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் சொன்னால் செவ்வாய் தோஷம் நீங்கும்

Image
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும். முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 16. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேல மரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய் தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்...

நாக தோஷம் பாதித்தவர்களுக்கு திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி?

Image
ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால், பெண் ஜாதகத்தில் தோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்யலாம். * ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் நாகதோஷம் இருந்தால் திருமணப் பொருத்தம் செய்யலாம். ஆண் அல்லது பெண், இருவர் ஜாதகத்தில், ஒருவருக்கு தோஷம் இருந்து, மற்றவருக்கு தோஷம் இல்லாவிட்டால், அந்த ஜாதகத்தைப் பொருத்தம் செய்யக்கூடாது.  * அசுவினி, மகம், மூலம், நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்சத்திரம் தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோ அல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.  * அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்ம நட்சத்திரம் வரும். ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.  * ஜாதக பலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள். * ஒரு ஆணின் ஜாதகத்தில் 2,4,5,7,8,12-வது இடங்களால் ராகு அல்லது கேது சுபபார்வையுடன் இருந்தால...

எலுமிச்சை விளக்கு போடுவதால் என்ன பிரச்சனைகள் தீரும்

Image
எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எழுமிச்சையானது திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.  மேலும் இதனை நோய்வாய்பட்ட மக்களின் அருகில் தொங்கவிடும் போது, இது தீய ஆவிகளை விரட்டி அவர்களை நோய்களிலிருந்து குணமடைய செய்யும் என்று நம்பப்படுகிறது. கெட்ட ஆவிகளை விரட்ட துர்கை அம்மன் வழிபாடு நடத்தப்படுகிறது.  துர்கா பூஜையின் போது எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை தோல் மெல்லியதாக இருக்க வேண்டும். (ஒற்றை எண்களில், அதிகபட்சம் 9) அதனை நெகிழ்வாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதனை செங்குத்தாக சரிபாதியாக வெட்டி கொள்ள வேண்டும், சாற்றினைப் பிழிந்து வெளியேற்ற வேண்டும்.  பின் அந்த பாதி எலுமிச்சையை உள்புறம் வெளியே வருமாறு திருப்பி, ஒரு கிண்ணம் போல் செய...

சகல தோஷங்களும் நீக்கும் கருட வழிபாடு

Image
பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும்; மாங்கல்யம் பலம் பெறும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா பத்து நாட்களுக்கு நடைபெறும். நான்கு ஆடி வீதிகளிலும் அம்பாள் வீதியுலா வருவாள். அதேபோல், ஆடி சுவாதி தினத்தில் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு ஆராதனையும், புறப்பாடும் நடை பெறும். கருடனின் அவதார நாளை நட்சத்திர அடிப்படையில் ஆடி சுவாதியன்று கொண்டாடுவார்கள். பாஞ்சராத்ர ஆகமப்படி திதியின் அடிப்படையில் கருட பஞ்சமியாகக் கொண்டாடுவார்கள். கருட பகவானுக்கு ருத்ரா, கீர்த்தி என்று இரண்டு தேவிகள், இவர்களே அரங்கநாயகிக்கு இரு கண்களாகத் திகழ்கிறார்களாம். கருட பகவான் திருமாலின் பல லீலைகளில் சம்பந்தப்பட்டுள்ளார். கஜேந்திர மோட்ச வைபவத்தில், கஜேந்திரன் என்ற யானையின் காலை ஒரு முதலை கவ்வி இழுக்க, கஜேந்திரன் திருமாலை ‘ஆதிமூலமே’ என்று கூவிச் சரணடைய, திருமாலின் திருவுள்ளத்தை அறிந்த கருடன் வாயு வேகத்தில் அவரை கஜேந்திரன் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சேர்த்தார். ர...

கண் திருஷ்டியில் இருந்து காக்கும் தர்மம்

Image
எந்தவொரு மனிதனுக்கும் கண்திருஷ்டி ஏற்படுவது இயற்கை. சிலரது பார்வையால் ஏற்படும் கதிர்வீச்சுகள் பாதிப்புகளை உருவாக்குகின்றன. ஓகோ என்றுதொழில் செய்து பொருள் ஈட்டியவர்கள், நிலைதடுமாறும் சூழ்நிலையைச் சந்திப்பதும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிக்கு தொடர்ந்து செல்ல இயலாத நிலை, குடும்பங்களுக்குள் ஒற்றுமைக் குறைவு, எந்தச் செயலைச் செய்தாலும் தாமதம், தடை இதுபோன்ற நிலைமை ஏற்பட கண்ணேறு ஒரு முக்கியக் காரணமாக அமைகிறது. புகழ் ஏணியின் உச்சியில் இருந்தாலும் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருந்தாலும் திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்படுவதை கண்கூடாக நாம் காணலாம். அதனால்தான் ‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். சிலருடைய பார்வைக்கு அவ்வளவு வலிமை உண்டு. எண்ணம் நல்லதானால் எல்லாம் நல்லதாகும். எனவே நாம் நல்ல எண்ணத்தோடு மற்றவர்களைப் பார்த்தால் நம் பார்வையால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. பெருந்தன்மை இல்லாதவர்களின் பார்வையே, ‘திருஷ்டி’யாக மாறுகிறது. இதுபோன்ற வலிமையான பார்வைகளில் இருந்து தப்பிப்பது நம் கையில் இல்லை. அதற்குரிய சில வழிமுறைகளைப் பின்பற்றினால் கண்திருஷ்டியில் இருந்...

வேப்பமரம் நட்டால் குழந்தை பாக்கியம்

Image
ராகு, கேதுக்களின் மத்தியில் மீதியுள்ள கிரகங்கள் இடம் பெற்றிருக்குமானால் அது கால சர்ப்ப தோஷம் என்று கூறப்படும். சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு. ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும். ஜன்ம லக்னத்திற்கு 5--ம் இடம் புத்திர ஸ்தானம் ஆகும். புத்திர ஸ்தானத்திற்கு 1,5,9 ஆகிய மூன்று திரிகோண ஸ்தானங்களில் எங்காவது ராகு அல்லது கேது இடம் பெற்றிருந்தால் அது புத்திர தோஷத்தை அளிக்கக்கூடியது. இவர்கள் அடிக்கடி சர்ப்ப சாந்தியைச் செய்து கொள்ள நன்மை உண்டாகும். மேலும் நாக தோஷத்தால் மகப்பேறு இல்லாதவர்கள் வேப்ப மரம் நடுவது நன்மை தரும். மேலும் சுபகிரகங்கள் பார்த்தால் தோஷம் விலகும்.

திருமணம் தடை நீக்கும் வெள்ளலூர் தேனீஸ்வரர்

Image
தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமண பாக்கியத்தை அள்ளி தரும் பேராற்றல் வெள்ளலூர் தேனீஸ்வரருக்கு உண்டு. இது குறித்து விரிவாக பார்க்கலாம். கல்யாணம்-ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இருமனம் ஒருமனமாக திருமணம் அவசியம். எவ்வளவு அற்புதமான நிகழ்வு இது. உண்மையை ஆழ்ந்து யோசித்தால் இறைவனின் சூட்சமம் இதில் இருக்கிறது. எங்கோ பிறந்த ஆண், எங்கோ பிறந்த பெண். இவர்கள் இருவரும் இல்லறத்தால் இணைந்து ஜனனத்தை உண்டாக்குகிறார்கள். அப்படிப்பட்ட அற்புதமான திருமண வாழ்க்கை, சிலருக்கு வயதைக் கடந்தும் கிடைக்காமல் தள்ளிப்போகலாம். அதனால் ஏக்கம் கொள்பவர்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகம். ஜாதகம் அல்லது பொருளாதார காரணங்களால் தங்கள் திருமணம் தள்ளிப்போகிறதே என்ற கவலை இருக்கலாம். இப்படிப்பட்டவர்கள் இனி கவலைப்பட வேண்டாம். உங்கள் மனக்குறைகளை ஆதிபரம்பொருளாகிய தேனீஸ்வரரிடம் கொட்டுங்கள். தேன் போன்ற இனிமையான இல்லற வாழ்க்கையை அவர் கொடுப்பார். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருமண பாக்கியத்தை அள்ளி தரும் பேராற்றல் அவருக்கு உண்டு. இத்தகைய சிறப்பு பெற்ற தேனீஸ்வரர் திருத்தலம் கோவையை அடுத்த வெள்ளலூர் பஸ் நிலையம் அ...

நவக்கிரக தோஷம் போக்கும் ஹோமங்கள்

Image
நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரகங்களுக்கு தனித் தனியாக ஹோமங்கள் செய்யப்படுவதும் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். நவக்கிரகங்களுக்கு தனித் தனியாக ஹோமங்கள் செய்யப்படுவதும் உண்டு. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். சூரியன் : ஜோதிட சாஸ்திர ரீதியாக சூரியன் என்பவர் பிதுர்காரகன் அதாவது ஒருவருக்கு அமைந்த தந்தை பற்றி குறிப்பிடக் கூடியவர். ஒருவரது சுயநிலை, சுய உணர்வு, செல்வாக்கு, கவுரவம், அந்தஸ்து, வீரம், பராக்கிரமம், நன்னடத்தை ஆகியவற்றையும், கண்கள், பார்வை, உடல் உஷ்ணம், அரசாங்க தொடர்பு ஆகியவை பற்றியும் சூரியன் குறிப்பிடுவார். ஒருவரது ஜாதக ரீதியாக சூரியனது நிலை கோச்சாரம் அல்லது திசாபுத்திகள் பாதகமாக இருந்தால் சூரிய பிரீதி ஹோமம் செய்து கொள்ளவேண்டும். சந்திரன் : சந்திரன் என்ற கிரகமானது ஜோதிட ரீதியாக ஒருவரது மனதின் எண்ண அலைகளை ஆட்சி செய்யும் சக்தி படைத்ததாகும். ஒருவரது சரியான உடலமைப்பை கட்டிக்காப்பதோடு, தாயாரது நிலையையும் சந்திரன் குறிப்பிடுவார். ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தின் ஆரம்பமாக உள்ள லக்னம் வலுவாக இல்லாத பட்சத்தில் சந்திரனை லக்னமாக வைத்து பலன் சொல்லப்படுவது மரபு...

நாகதோஷம் நீக்கும் நாகம்மன்

Image
விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள். சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் அந்தணர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். தங்களது நிலங்களில் வேலை செய்யும் பொருட்டு அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களை வரவழைத்து தங்க இடம் கொடுத்து வேலை செய்ய வைத்தனர். இவ்வாறு வந்தவர்களில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினரும் இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களது இல்லற வாழ்வு சிறப்புற்று இருந்தது. மாரியம்மா கர்ப்பமுற்றாள். ஏழுமாத கர்ப்பிணியாக மாரியம்மன் இருந்தபோது ஒருநாள் காலை வயல்வெளிக்குச் சென்ற முனீஸ்வரன் வரப்பு மேட்டில் நல்ல பாம்பை கண்டார்.  அவரது காலடிச் சத்தம் கேட்ட அந்த பாம்பு அவ்விடம் விட்டு நகர்ந்தது. இருப்பினும் கண்ட பாம்பை அடிக்காமல் விடக்கூடாது என்றெண்ணிய முனீஸ்வரன், தனது பின் இடுப்பில் சொருகியிருந்த அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்...

குரு தோஷம் போக்கும் வாமனர் வழிபாடு

Image
வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக்கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம். குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குருபகவான் எந்த கிரகத்தைப் பார்த்தாலும், அந்த கிரகம் சுப பலன்களைத் தந்து விடும். நவக்கிரகங்களில் பூரண சுபகிரகமாக குரு திகழ்கிறார்.  அந்த குருவின் அம்சமாகத் திகழ்பவர் வாமனர். வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குரு தோஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக்கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம்.  வாமனமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. வாமனரை மனதில் எண்ணி பெருமாள் கோவில்களிலும், திருவிளக்கின் முன்னும் கூட தீபம் ஏற்றி வழிபடலாம். அதன் மூலம் அனைத்து சிறப்புகளும் வந்து சேரும்.

திருமணத் தடை, குழந்தை வரம் அருளும் இரட்டை விநாயகர்

Image
ஆன்மிக தலமான மதுரையில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் அருகில், இரட்டை விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. திருமண தாமதம், குழந்தைப்பேறு இன்மை, கடன் பிரச்சினை, தொழில் விருத்தியின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானது. பக்தர்கள் தங்களது பிரச்சினைகளை இரட்டை விநாயகரிடம் முன்வைத்து பிரார்த்தனை செய்கிறார் கள். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பலரும், இத்தலம் வந்து விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்திச் செல்கின்றனர். இதில் விசேஷம் என்னவென்றால், இந்துக்கள் மட்டுமல்லாது, வேற்று மதத்தினரும் இரட்டை விநாயகரை வணங்கியும், நேர்த்திக்கடன்களை நிறைவேற்றியும் மகிழ்வது தான். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். 150 ஆண்டுகளுக்கு முன் பழனியப்ப முதலியார் என்பவரால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக கூறப்படு கிறது. இங்குள்ள ஆலமரமும், வேப்பமரமும் நூற்றாண்டை தாண்டி நிற்கின்றன. எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுகிறோம். ஆனால் அந்த விநாயகரே ஒரு காரியத்தை செய்வதற்கு முன், விநாயகர...

செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரத்தை எப்போது செய்வது?

Image
செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் தான் முழு பலனையும் பெற முடியும். செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் செய்ய தகுந்த நேரம், காலம் உள்ளது. அந்த நேரங்களில் பரிகாரம் செய்தால் முழு பலனையும் பெற முடியும். சுபமான பரிகாரங்களை வளர்பிறை நாட்களிலும் துயரம் துக்கம், நீக்கும் பரிகாரங்களை தேய் பிறை நாட்களிலும் செய்ய வேண்டும். குளத்தங்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை கடற்கரை, அருவிகரை, கோசாலை, சிவ ஆலயங்கள், விஷ்ணு சந்நிதி, குரு ஆலயம் ஆகிய இடங்களில் சுப பரிகாரங்களை செய்யலாம்.  செவ்வாய் இருக்கும் இடத்தின் அதிபதி என்ன கிழமை குறிக்கிறதோ அந்த கிழமையில் பரிகாரம் செய்யலாம். அவரவர் பிறந்த நட்சத்திரத்தன்றும் பரிகாரம் செய்யலாம். செவ்வாய் கிழமையிலும் பரிகாரம் செய்யலாம்.  ஜென்ம நட்சத்திரத்துக்கு 4, 8, 12 ஆக வரும் நட்சத்திர நாட்களில் பரிகாரங்கள் செய்யக்கூடாது. பரிகாரம் செய்து கொள்பவரின் மனைவியின் நட்சத்திரத்திலிருந்து 4, 8, 12 ஆக வரும் நாட்களிலும் பரிகாரம் செய்யக் கூடாது. இவர்களின் மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் 4, 8, ...

செவ்வாய் தோஷம் போக்கும் பழனி முருகன்

Image
பழனி செவ்வாய் ஆதிக்கம் பெற்ற தலமாகும். இதனால் செவ்வாய் கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நிவர்த்தி பெறுகிறார்கள். பழனி செவ்வாய் ஆதிக்கம் பெற்ற தலமாகும். இதனால் செவ்வாய் கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு நிவர்த்தி பெறுகிறார்கள். அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி பழம் பெருமையுடையது. தமிழ் கடவுள் முருகப்பெருமான் இங்கு தண்டாயுதபாணி கோலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ளார். கைலாய மலையில் சிவனிடம் நாரதர் மாங்கனியை கொண்டு வந்தார். அப்போது அருகில் இருந்த பார்வதி தேவி அந்த பழத்தை தனது மகன்களான விநாயகருக்கும், குமரனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினார். ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனிதன்மை போய்விடும் என்று கருதி தனது மகன்கள் 2 பேருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார்.  உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கே இந்த ஞானப்பழம் என்று அறிவித்தார்.முருகன் உடனே தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தை சுற்றி வந்தார். ஆனால் விநாயகரோ தனது பெற்றோரை உலகமாக கருதி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றார். இதனால் கோபம் கொண்ட கு...

பல தலைமுறைகள் செய்த பாவங்களை தீர்க்கும் புண்ணிய தீர்த்தங்கள்

Image
ராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. இந்த தீர்த்தங்களில் நீராடினால் பல தலைமுறைகள் செய்த பாவங்களும் அகலும் என்கிறார்கள். ராமேஸ்வரம் ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்கள் உள்ளன. இங்கு ஆலயம் எதிரில் உள்ள கடல் தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடி, பின்பு வரிசையாக ஆலயத்தின் உள்ளே உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடவேண்டும். இப்படி செய்தால் ஒருவருடைய பல தலைமுறைகள் செய்த பாவங்களும் அகலும் என்கிறார்கள். இதனால் இப்பிறப்பில் அனுபவிக்கும் சகல பாவங்களும் விலகி ஆனந்தம் நிரந்தரமாய் உண்டாகும். இத்தல கோடி தீர்த்தத்தை ஆலயத்தில் பெற்றுவந்து வீடுகளிலும், தொழில் செய்யும் இடங்களிலும் தெளித்து வர, தரித்திரம், பீடைகள் அகன்று அபிவிருத்தி உண்டாகும். ஆலயத்தில் உள்ள 22 தீர்த்தங்கள் வருமாறு: மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்திரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவர் தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம், கங்கா தீர்த்தம், யமுனா தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர...

பில்லி, சூன்யம், கடன் தொல்லை போக்கும் நர்த்தன விநாயகர்

Image
நர்த்தன விநாயகரை அருகு சாற்றி விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட பகை, பில்லி, சூன்யம், எதிரி தொல்லை, கடன் தொல்லை அகலும் என்கிறார்கள். சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றதும், முதலில் தல விநாயகர் நர்த்தன விநாயகர் திருக்காட்சி தருகிறார்.  இங்கு அன்னை கற்பகாம்பாளிடம் முருகப்பெருமான் சூரனை சம்கரிக்க சிங்கார வேல் பெற்றபோது, ஈசன் இங்குள்ள விநாயகரை வழிபட்ட பின்பே முருகப்பெருமானை போருக்கு செல்ல பணித்தாராம். இதனால் சிங்காரவேலர் இத்தல விநாயகரை வழிபட்டாராம். இதனைக்கண்டு மகிழ்ச்சி அடைந்த விநாயகர், அந்த மகிழ்ச்சியில் ஆனந்தித்து நர்த்தனம் ஆடினாராம்.  நர்த்தன கோலத்திலேயே முருகப்பெருமானையும் ஆசீர்வதித்தாராம். இதனால்தான் இத்தல விநாயகர் நர்த்தன விநாயகர் என்றானார் என்கிறது தலபுராணம். விநாயகர் என்றும் இத்தலத்தில் ஆனந்தித்த நிலையில் நர்த்தன திருக்கோலத்தில் இருப்பதால் விநாயகர் அகவல் பாராயணம் செய்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் வாழ்வில் சகல நலத்தையும், வளத்தையும் தருவார் என்கிறார்கள்.  அதுமட்டுமல்ல, முருகப்ப...

வீட்டில் செவ்வாய் தோஷ நிவர்த்தி பூஜை செய்வது எப்படி?

Image
செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். செவ்வாய் சாந்தி பரிகாரத்தை உங்களது வீட்டிலேயே எளிமையாக செய்து செவ்வாய் பகவானின் அருளை பெறலாம். இப்பூஜைகளின் மூலம் செவ்வாய் திருமண தடையை நீக்குவது மட்டும் அல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தருகின்றார். செவ்வாய் தசை நடப்பில் இருந்து சோதனைக்கு ஆளாகி இருப்பவர்களும் இந்த பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்ய வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தேர்ந்தெடுப்பது நல்லது. சஷ்டியோடு செவ்வாய் வருவது மிக உத்தமம். செவ்வாய் அன்று நாகதோஷ வேளையில் (ராகு காலத்தில்) அல்லது செவ்வாய் ஹோரையில் பரிகார பூஜையை தொடங்குவது நல்லது. அன்று காலை குளித்து விட்டு வடக்குத் திசை பார்த்து அமரவும். உங்கள் முன்பு ஒரு மனை வைத்து மனைமேல் காமாட்சி அம்மன் விளக்கு வைத்து தீபம் ஏற்றவும், தீபத்திற்கு முன்பு வாழை இலை போட்டு (வாழை இலை நுனி கிழக்கு பார்த்து இருக்க வேண்டும்) இலையில் 27- அரச இலைகளை வைக்கவும்.  இலை மீது முழு துவரம்பருப்பு கொட்டைகளையும், தோல் நீக்காத முழு உளுந்து கொட்டைகளையும் வைத்து அதன்மேல் ஒரு சிறிய அக...

தோஷங்கள் அகற்றும் முண்டகக்கண்ணி அம்மன்

Image
முண்டகக்கண்ணி அம்மன் தலத்து அன்னை நாக வடிவத்தை ஒத்திருப்பதாலும், நாகம் இவளை வழிபடுவதாலும், நாக தோஷம் மற்றும் மாங்கல்ய தோஷம் உள்ளவர்களுக்கு இவள் கண்கண்ட தெய்வமாக விளங்குகின்றாள். மயிலாப்பூரின் பழமையான ஆலயம், ராகு–கேது தோஷம் நீக்கும் தலம், காலையில் தொடங்கி மதியம் வரை தொடர்ந்து அபிஷேகம் காணும் அம்மன் ஆலயம் என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாகத் திகழ்வது சென்னை மயிலாப்பூரில் வாழும் முண்டகக் கண்ணி அம்மன் ஆகும். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாகத் தோன்றியவள் முண்டகக் கண்ணி அம்மன் ஆவார். முண்டகம் என்பதற்குப் பல்வேறு பொருள் வழங்கப்பட்டாலும், தாமரை மலர் என்பதே பொருத்தமானதாகும். கண்ணி என்பதற்கு கண்களை உடையவள் என்று பொருள் கூறப்படுகிறது. ஆக, தாமரை மலரை ஒத்த வடிவமும், தாமரை போன்ற கண்களையும் உடையவள் என்ற பொருளில் முண்டகக் கண்ணி என்றப் பெயரில் அன்னை அழைக்கப்படுகிறாள். மயிலாப்பூரில் முண்டகக்கண்ணியம்மன் கோவில் தெருவின் நடுப்பகுதியில், கிழக்கு முகமாக இந்தத் திருக்கோவில் அமைந்துள்ளது. எளிய மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக நிற்கிறது. அதன் வலது புறம் சிறிய நுழைவாயிலும் உள...

நாகதோஷம் உள்ளதா என்பதை அறிந்து கொள்வது எப்படி?

Image
ராகு, கேது என்ற இரண்டு கிரகங்களை பாம்புகள் என்று சொல்கிறார்கள். ராகு, கேது ஆகிய கிரகங்களால் ஏற்படும் தோஷங்களைச் சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. சர்ப்ப தோஷம் பலவித வியாதிகளை உண்டாக்கும், குழுந்தை பாக்கியம் கிடைக்காது. ராகுத் தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது தலங்களாக ஸ்ரீ காளகஸ்தி, பெரும் பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் வழிபடும் தலம் திருப்பேரை. தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலமாகும். இந்த நேரத்தில் நல்ல காரியங்களை மக்கள் செய்வது இல்லை. பாம்பின் தலையை ராகு என்றும் உடலைக் கேது என்றும் குறிப்பிடுகிறார்கள். ராகுவின் வரலாறும் கேதுவின் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே வித தன்மையை உடையன. ஸ்ரீராகு ஸம்ஹதா தேவியின் மகனாவார். தேவரும், அசுரரும் பார்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி வாசுகியைக் கயிறாக்கிக் கடைந்தனர்.  பார் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிவந்தன. கடைசியாகத் தன்வந்திரி பாற்கடலில் இருந்து எழுந்தார். அவரது கரங்களில் அமிர்த கலசம் இருந்தது. அதை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். இந்தச் சமயத்தில் மகாவிஷ்ணு மோகினி வடிவத்தில் வந்தார். அவரைக் ...

பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் ?

Image
நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும். பித்ரு தோஷத்தை ஜாதகத்தில் கண்டறிவது எப்படி? ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்த்திருந்தாலும் பித்ரு தோஷம் உண்டு. பித்ரு தோஷத்தக்கு என்ன பரிகாரம் செய்யவேண்டும்? ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம். குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டிருந்தாலோ மட்டுமே தில ஹோமம் செய்யவேண்டும். அனைவரும் இயற்கை மரணம் அடைந்திருந்தால், தில ஹோமம் செய்யவேண்டியதில்லை. பித்ரு தோஷத்தினால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன? பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு சிக்கிரம் திருமணம் நடக்காது. மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம். அல்லது தம்பதியரிடையே அன்னியோன்னியம் இருக்காது. அல்லது குழந்தைப் பாக்கியம் இருக்காது.  ...